விமான வைபவங்கள்

சென்னையிலிருந்து முதன் முறையாக விமானத்தில் செல்பவர்: மும்பைக்கு போகின்ற விமானம் எந்தெந்த ஸ்டாப்புகளில் நிற்கும்?
விமானநிலைய சிப்பந்தி: ???
&&&
சென்னையிலிருந்து டெல்லிக்கு வாழ்க்கையில் முதன் முறையாக விமானத்தில் செல்பவர்: உங்க பைலட்டிடம் சொல்லி என்னை கொஞ்சம் கரோல்பாக் மார்க்கெட் பக்கத்தில் இறக்கிவிடச்சொல்லுங்க. அங்கே தான் என் உறவினர் வீடு இருக்கிறது.
விமானநிலைய சிப்பந்தி: ???
&&&
சென்னையிலிருந்து முதன் முறையாக விமானத்தில் செல்பவர்: நான் முதல்முறை விமானத்தில் போகிறேன். கொஞ்சம் மெதுவாக மெள்ளமாக ஓட்டும் பைலட்டை போடுங்க.
விமானநிலைய சிப்பந்தி: ???
&&&
சென்னையிலிருந்து முதன் முறையாக விமானத்தில் செல்பவர்: நான் ஒரு சர்க்கரை நோயாளி. அகமதாபாத் போவதற்கு இரண்டு மணிநேரம் ஆகும் என்கிறார்கள். பறக்க ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் எங்கேயாவது வண்டியை நிறுத்தினா நான் பாத்ரூம் போய்வர சௌகரியமாக இருக்கும்.
விமானநிலைய சிப்பந்தி: விமானத்தினுள்ளேயே பாத்ரூம் வசதி இருக்கிறது.
சர்க்கரை நோயாளி: அவ்வளவு உயரத்தில் விமானம் பறக்கும்போது கீழே உள்ளவர்களுக்கு என்னால் அசௌகரியம் இருக்கக்கூடாது.
விமானநிலைய சிப்பந்தி: ???
&&&
சென்னையிலிருந்து முதன் முறையாக விமானத்தில் செல்பவர்: என்ன அநியாயம் இது. ஏழாயிரம் ரூபாய் கொடுத்து விமான டிக்கெட் வாங்கியுள்ளேன். இங்கே வந்து ஒரு ப்ளேட்டு இட்லியும் காபியும் குடிச்சா முன்னூறு ரூபாயா? என்ன பகல் கொள்ளை இது? முப்பது ரூபாய்ல எனக்கு சூடா ஒரு ப்ளேட்டு இட்லி சூடான பில்டர் காபி ரெண்டுமே கிடைச்சிடுமே?
விமானநிலைய சிப்பந்தி: அப்போ நீங்க எழுநூறு ரூபாய் கொடுத்து ரயில்வண்டியில் ஊருக்கு போயிருக்கலாமே?
முதன் முறையாக விமானத்தில் செல்பவர்: ???
&&&
சென்னையிலிருந்து முதன் முறையாக விமானத்தில் செல்பவர் ( விமான பணிப்பெண்ணிடம்): என் இருக்கை பக்கத்தில் உள்ள இரண்டு சீட்டுகளும் காலியாக இருக்கிறது. விமானம் டேக் ஆப் பண்ணும்போது நீங்கள் கொஞ்சம் என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டா எனக்கு பயம் இல்லாமல் இருக்கும்.
விமான பணிப்பெண்: ???
&&&
சென்னையிலிருந்து முதன் முறையாக விமானத்தில் செல்பவர் (விமான பணிப்பெண்களிடம்) : நீங்கள் மூணு பேரும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணியிருக்கிறீங்க. ஒரேமாதிரி தொப்பியை தலையில் வச்சிருக்கீங்க. பார்க்கவும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கீங்க. நீங்க மூணு பேரும் அக்காதங்கைகளா?
பணிப்பெண்கள்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (11-Mar-23, 8:57 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 42

மேலே