ஓர்மாலைப் பொழுதினில் பெண்ணிலா உன்னைநான் சந்தித்தேன்

வெண்ணிலா வானில்வரும் ஓர்மாலைப் பொழுதினில்
பெண்ணிலா உன்னைநான் சந்தித்தேன் தோட்டத்தில்
கண்ணிலே கவிதை மெல்லிதழில் முல்லையேந்தி
எண்ணமெல்லாம் நீயே வியாபித்து நிற்கிறாய்


வெண்ணிலா வானிலோர் மாலைப் பொழுதினில்
பெண்ணிலா உன்னைநான் சந்தித்தேன் தோட்டத்தில்
கண்ணிலே பூங்கவிதை மெல்லிதழில் முல்லையேந்தி
எண்ணமெலாம் நிற்கிறாய்நீ யே

எழுதியவர் : கவின் சாரலன் (16-Mar-23, 9:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே