சிலை வடிக்க சிதறிய கற்கள்
சிலை வடிக்க சிதறிய கற்கள்
சிற்பியின் உளி
பட்டு சிதறிய
சிறு கற்கள்
ஏங்கி போய்
மண்ணோடு மண்ணாகித்தான்
போயிருக்க வேண்டும்
தான் மட்டும்
சிதறி வெளியே
விழுந்து
என்னுள் செதுக்கிய
சிலை மட்டும்
காலம் காலமாய்
நின்று கொண்டிருக்கிறதே
நான் என்ன
பாவம் செய்தேன்?
இவன் உருவாக
என் தியாகம்
ஊருக்கு தெரியாமல்
போய் விட்டதே..!