பல் விளக்கல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

துகளிலை காட்டமினை தொட்டுத் துலக்கிற்
றுகளிலை காட்டாது தோடந் - துகளிலைகண்
மெய்த்துவரை யொத்திருக்கின் மேனாள் வரைமூரன்
மெய்த்துவரை யொத்திருக்கு மே!

- பதார்த்த குண சிந்தாமணி

பொருளுரை:

தூள், துவர்ப்பான இலை, கொம்பு இவற்றால் பல் விளக்கினால் வாத, பித்த, சிலேத்துமம் இவற்றால் பல்லிடத்தும் அதன் வேரிடத்தும் உண்டாகின்ற இருபத்து மூன்று நோய்களும் ஏற்படாது. பற்களும் இறுதி வரைக்கும் மலையைப் போல் உறுதியாயிருக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Mar-23, 8:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே