திருவள்ளுவரைச் சந்திப்போம் அறமாய் - தரவு கொச்சகக் கலிப்பா

தரவு கொச்சகக் கலிப்பா
(காய் 4)

திருவள்ளு வரைத்தாமே சந்திப்போம் அறமென்றே
உருவான பாயிரவி யல்தன்னில் இறைவாழ்த்து
தருமின்பம் வான்சிறப்பு, நீத்தாரின் பெருமையையும்
உரமென்றே அறன்வலியு றுத்தலென்பார் உளமுடனே! 1

இல்லறவி யல்தன்னில் இயற்றினரே அதிகாரம்
சொல்லுதற்கே அருமையென சுகமான இருபதென்பேன்
சொல்லுகின்ற ’இல்வாழ்க்கை’ சுகமான ’புகழ்’வரையும்
வெல்லுதற்கே ஒப்பாத விவரமுள்ள பாக்களையே! 2

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Mar-23, 6:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே