பல்விளக்கத் தக்க கொம்புகள் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வேலுக்குப் பல்இறுகும் வேம்புக்குப் பல்துலங்கும்
பூலுக்குப் போகம் பொழியுங்காண் - ஆலுக்குத்
தண்டா மரையாளுஞ் சாருவளே நாயுருவி
கண்டால் வசீகரமாங் காண்!
- பதார்த்த குண சிந்தாமணி
பொருளுரை:
கருவேலினால் பல்லுக்கு உறுதியும் வேம்பினால் ஒளியும் நீர்ப்பூலாவினால் வீரிய விருத்தியும் ஆலினால் லட்சுமி கடாட்சமும் நாயுருவியால் முகவசியமும் உண்டாகும்.