காதல் சென்னை பெயர் காரணம்
அம்பத்தூர்
தாய்சக்தி கோயில் தமிழ்நாட்டில் நூத்தெட்டாம்
தாய்கோயில் சென்னையிலும் தானுண்டு -- ஆய்க்குத்தான்
சென்னையில் கோயில் இடவரிசை ஐம்பதூர்
இன்றது அம்பத்தூர் கேள்
கோடம்பாக்கம்
நவாப்புடை குதிரைப் மேய்த்த புல்வெளி
கோடா பேக்கென்ற இடமும்
மருவி கோடம் பக்கம் என்றாரே
முகப்பேர்
நுளம்பி ஆறே பின்கூவம் ஆங்கே
சந்தான பெருமாள் கோயில் ஒன்று
சந்தானம் தமிழிலே மகப்பேறு
ஆகி இன்று முகப்பேர் ஆனதே
சைதாப்பேட்டை
குதிரை விற்கும் சையத் ஆமத்
அடையாரின் தரையில் பாலம் கட்ட
சைதா பேட்டை என்றும் மற்றும்
சரபோஜி அரசன் தாயார் சைதாம்பா
நிலமங்கு இருக்க அதுவும்
சைதா பேட்டை ஆனது என்பாரே
வேளச்சேரி
வேலியுள்ளச் சேரி இருந்த இடமின்று
வேளச்சே ரித்தானாங் கேள்
சேப்பாக்கம்
ஆறு தோட்டம் கொண்ட ஊரை
ஆறு பக்கம் என்பதை உருதில்
சேபேக் என்று அழைத்துப்
பின்னே சேப்பாக் கமென்று ஆனதே
பாண்டி பஜார்
சௌந்திர பாண்டி பசாரும் பின்னர்
சௌந்திரம் ஒதுக்கி வெறுமே
பாண்டி பசார் என்று மருவியதே
பல்லாவரம்
பசுக்களை வளர்க்கும் ஆயர்கள் நிறைந்த
ஊரை பலஆ புரமென அழைத்து
பின்னது மருவி பல்லாவ ரமானதே
பனகல்பார்க்
அன்றை மதராஸ் முதல்வர் பனகலென்ற
மன்னர் நினைவில் அழைத்தனர் -- மன்னர்
பனகல் வசித்த அவரது தோட்டம்
பனகல்பார்க் என்றழைத்தார் பார்
தியாகராஜபுரம்
நீதிக் கட்சியின் முதல்தலைவர் அன்றைய
பிடிதியாக ராஜனின் நினைவில்
வைத்த பேர்தியாக ராஜபுரம் ஐயா
புரசைவாக்கம்
அன்று புரசைமரம் காணவெங்கும் வைத்தார்
புரசைவாக்கம் உண்மையாம் சொல்லு
பூவிருந்தவல்லி
மல்லி நிறைப்பூங்கா தான்புஷ் பகவல்லி
மல்லி தொடுத்தமாலை காஞ்சிக்கு -- நல்லநம்பி
ஆழ்வார் பெருமாள் அணிய மகிழ்தவூர்
கேழ்பூ விருந்தவல்லி இன்று
தண்டையார்பேட்டை
தொண்டியூர் மஸ்தானும் சென்னைவந்து பேர்பெற்ற
அண்ணல் எனத்திகழ்ந்தார் கண்ணெதிரில் -- அண்ணாரும்
அண்மையில் வாழ்ந்த கடவுளின் பக்தரென்றார்
தொண்டியது தண்டையார்பேட் சொல்
மந்தை வெளி
ஆடுமாடு மேயவும் நல்ல செழிப்பான
மேடுமதை மந்தைவெளி என்றாரே -- பாடியாயர்
மாடுமின்று கொட்டில் அடைத்துபால் விற்பர்காண்
மாடுகண்ட மாநகர் பாரு
மயிலாப்பூர்
மயிலை எனின்இரு வாச்சிப்பூ வாங்கேள்
மயிலாப்பூர் பேரும் அதனால் -- மயில்கள்
அதிகம் பறந்துவந்து ஆடுமாம் இன்றும்
அதிசமயில் கோயிலில் காண்
போரூர்
முருகன் போரிட்டு மணம்செய்த இடமே
போரூர் என்றார் பல்லவ அரசர்
இங்கு போரிட்ட னரென்றும்
அதனால் போரூர் என்பர் கேளாய்
பெரம்பூர்
மூங்கில் பிரம்பது ஓங்கி வளர
பிரம்பூர் பெரம்பூர் பெயரு
திரிசூலம்
திரிசூல நாதர் திருத்தலத் தாலே
திரிசூலம் ஊரின் பெயர்
திருவல்லி்கேணி
ஊர்முழுக்க கேணி யதில்நிரை அல்லி
திருவல்லிக் கேணி யிது
பாரிமுனை
தாமஸ் பாரியென்பான் வணிகம் செய்து
அவ்விடம் முனையில் அலுவல் கட்டிடம்
அமைக்க மக்கள் சுட்டிக்
காட்டினர் அவ்விடம் முனைப்பாய் பாரியே
மாம்பலம்
மாமலான் என்றதும் மாவட்ட ஆட்சியர்
மாம்பலம் மானதென்பர் காண்
கிண்டி
அன்று கோட்டா ளக்கொண்டி விகடம்
நின்றா டும்தாசி யரும்நிறைந்த இடமே
கொண்டியும் மருவி பிறகே
யவ்வி டந்தான் இன்று கிண்டியாமே
சேப்பாக்கம்
குயவர் காலால் சேற்று மண்ணையும்
குழைத்து வண்டி வண்டியா கவேத்தான்
வீடுகட்ட வெளியே ஏற்றிய சேற்றுப்
பக்கம் சேப்பாக்க மெனவே மாறியதே
ஏழும்பூர்
சூரியன் எழும்ப முதலில் எழுமீஸ்வர்
கோயில் மேட்டில் வீழவும் எழும்ஊர்
என்று மக்களும் அழைக்க
பின்னது எழும்பூர் என்றது மாறியதே
ராயபுரம்
பல்லவர் காலத்தில் தானமாக ராயர்க்கு
சொல்லி வழங்கிய ஊரைக்கேள்-- நல்லவூராம்
ராயர் புரமாம் மருவியதன் பின்னரே
ராயபுரம் என்றார்மக் கள்
சிந்தாதிரி பேட்டை
வெள்ளையர் காலத்தில் சின்னத் தறிவைத்து
உள்ளே நெசவுக் குடிப்புகுந்தார் -- கள்ளமிலா
சின்னதறி பேட்டை எனப்பேரும் மாறியது
சிந்தாதி ரிப்பேட்டை என்று
அமைந்தகரை
கூவநதி யின்கரை யோரம் இராமன்
அமர அமைந்தகரை யாம்
பெருங்குளத்தூர்
பெரிய குளங்கள் நிரம்பிய ஊரும்
பெருங்குளத்தூர் பேர்வைத்தார் கேள்
நந்தனம்
நந்தவம்சம் ராமனை பார்த்ததும் தந்ததுபின்
நந்தனம் என்றழைத்தார் பார்
ராமாவரம்
நந்தனதில் ராமசேனை தங்கிய ஊருமே
இந்தரா மாவரமாம் கேளு
குன்றத்தூர்
குன்று நிறைந்தவூர் குன்றத்தூர் என்றதை
கூப்பிட்டார் உண்மையாஞ் சொல்
சுங்கச் சாவடி
பிரிட்டீஷ் வரிவசூல் செய்த இடமின்று
சுங்கசாவ டித்தானாம் சொல்
நந்தனம்
மாஅம்ப லத்துசிவ னாரின்பூ சைக்குப்பூ
தந்ததால் நந்தனமாம் பார்
யானைக் கவுணி
திருக்குடை விசேடத்தில் பெருமாள் யானை
போலத் தாண்டி ஓடிய இடமும்
யானைக் கவுணி என்றார் பாரே
மாதவரம்
மாதவன் சிவனிடம் வரம்பெற்ற இடமும்
மாதவ வரமும் பின்னே
மாதவரம் எனமக்கள் அழைக்க மாறியதே
வளசரவாக்கம்
முருகன் வள்ளிக் கூடிய இடமும்
வள்ளி சேர்பாக்கம் இன்றது
வளசர வாக்கம் ஆக மறியதே
ஈக்காட்டுத் தாங்கல்
தண்ணீரில் மிதக்கும் ஈரக் காட்டிற்கு
திருவல் லிக்கேணி கோயிலின் பெருமாளும்
வருடம் ஓர்நாள் வத்துத தங்கும்
ஈரக் காடு இன்று
ஈக்காட் டுத்தாங்க லாகிப் போனதே
முகலி பக்கம்
கோவூர் ஈசனின் கிரீடம் மவுளி
அப்பெயரில் மவுளி வாக்கம்
ஊரதும் முகலிவாக் கமாக மறியதே
அயனாவரம்
அயன்பிரம்மா சிவனிடம் வரம்பெற்ற இடமும்
அயன்வரம் அதுவுமே மருவிப்பின்
அயனாவ ரமென மாறி நின்றதே
மண்ணடி
நரிமேடு குவியல் மண்ணை வெள்ளமது
அடித்து பள்ளத்தை சமன்செய்த
இடமும் மண்ணடி பெயரைக் கொண்டதே
கொத்தவால் சாவடி
கொத்வா லென்ற ஒர்வரி வசூல்
மையமும் வெள்ளையர் காலத்தில்
இருக்க கொத்வால் சாவடி என்றாரே
மிண்ட்டு
ஆங்கி லேயன் வெள்ளித் தங்கத்தை
உருக்கி காசாக அடித்த இடமே
தங்கசாலை இன்றது பெயரளவில்
மிண்டு ஆங்கிலப் பேராகிப் போனதே
பிராட்வே
வசிக்க வீட்டுக்கும் வரிகொடு என்றான்
பேப்பமன் பிராட்வே வசூல்
நடத்திய இடமே சென்னை பிராட்வே
குரோம்பேட்டை
சென்னையில் தோல்தொழிலை செய்திடுஞ் சாலை
இடங்குரோம் பேட்டை இருக்கு
தெய்வ நாயகம் பேட்டை
தெய்வ நாயகம் முதலியும் இருந்தவூர்
தெய்வ நாய கப்பேட்டை
பொய்யில்லை அவர்பேர் ஊருக்கு வைத்தாரே
தேனாம் பேட்டை
தென்னை நிறைந்ததோர் தென்னம்பேட் டையின்று
ஆனது தேனாம்பேட் டை
ஆவடி
ஆவடி எனும் ஊர், - Armoured Vehicles And Depot of India எனும் ஆங்கில வார்த்தையின் சுருக்கம்.
நன்றி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
