என் வலிகள் -சகி

எத்தனையோ
இரவின் மடியில்
என் கண்ணீர் துளிகள்
வற்றாத கடலாக....

இரவினில் விண்ணில்
மின்னும் நட்ச்சத்திர
கூட்டத்தை
கணக்கிமுடியாது....

என் வலிகளும்
எண்ணிலடங்கா
நம்பிக்கை துரோகங்கள்...

உன் உதாசீன
பேச்சும்,செயலும்
இன்று என்னை
உன்னிடம் இருந்து
வெகு தொலைவு
பிரித்து விட்டது.....

என் காதலும்
நானும் உன்னிடம் இருந்து
இனி என்றுமே தொட
முடியாத வானத்தை போல்...

உடைந்த கண்ணாடி
உதவாது.....

என்னையும்
என் காதலையும்
உடைத்து விட்டாய்....

தொட எண்ணி விடாதே
காயங்கள் இனி உனக்கு தான்....

ஊருக்கு பிரிவில்லை
நமக்கு...

உள்ளத்தில்
நிரந்திர பிரிவு எனக்கு....

நீ தந்த
காயங்கள் ஆறாதவை
என் மரணம் வரை

எழுதியவர் : Sagi (28-Mar-23, 8:13 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 1016

மேலே