மாறாத நினைவும் மறக்காத உறவும் நீ 555

***மாறாத நினைவும் மறக்காத உறவும் நீ 555 ***


பிரியமானவளே...


கிழக்கே உதித்த கதிரவன்
மேற்கில் மறையும் நேரம் வந்தும்...

எனக்கு மட்டும் இன்னும் இருளாகவே
இருக்கிறது என் வாழ்க்கை...

நீ
என்னோடு இல்லாததால்...

என்னோடு நீ
இருந்த நாட்களில்...

அமாவாசை இரவுகூட
வெளிச்சமாகவே மின்னியது...

என்னிடம் நீ
தோற்றுப்போவது விருப்பமில்லை...

நான் உன்னிலும் நீ என்னிலும்
தோற்றுபோகவேண்டும்...

என் சகியே என்னுடன் நீ நிழலாக
வாழ ஆசை இல்லை எனக்கு...

நிஜமாக
வாழவேண்டும் நாம்...

நீ சொல்லி கொடுத்த காதலை
நீயே மறக்க சொல்வது எப்படி...

மாறாத நினைவும்
மறக்காத உறவும் நீதானடி.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (28-Mar-23, 5:38 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 384

மேலே