ராமாயணம் வழங்கும் உண்மைகள்

தசரதராமன் உன்னதமான கடவுளின் அவதாரம்
உத்தமியான புனித ஜானகியோ ராமனின் தாரம்
அனுமனுக்கு இவ்விருவரே வாழ்வின் ஆதாரம்

ராவணன் அழிந்தான் ராமனுடைய வாழ்வும்தான்
ஊரார் பேச்சைக்கேட்டு பத்தினியை சோதித்தான்
தீப்பிரவேசம் செய்தும் சீதைக்கு வனவாசம்தான்
எனவே ராமன் வாழ்க்கை ததிங்கிணத்தோம்தான்

தர்மம் காத்தவன் அவன் மனைவியை காத்தானா?
ராஜமகுடம் சூடியவன், குடும்பத்தைக் காத்தானா?

ராமாயணம் தரும் வாழ்க்கை கோட்பாடுகள் இதுவே
தீயவர்கள் (இராவணன்) இறுதியில் தோற்பது உறுதி
அதற்கு தெய்வசக்தியும் (அனுமன்) கூட்டிடும் உறுதி
தெய்வமெனினும் (ராமன்) பாபம் புரியுமென்பது நியதி
உத்தமியாய் (சீதை) வாழ்ந்திடில் தெய்வீகம்தான் இறுதி

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (30-Mar-23, 4:45 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 33

மேலே