மாதவம் செய்திடல் வேண்டும்
மாதவம் செய்திடல் வேண்டும்
மற்றவர் துயருக்கும், துயருற்று
துடிக்கும் உற்றவர் கிடைத்திட
மாதவம் செய்திடல் வேண்டும்.
வையகம் போற்றும் மகவை
ஈன்றிட தாயும் தவறாது
மாதவம் செய்திடல் வேண்டும்.
மனம் விரும்பும் செயல்தனை
செய்திட மாதர்தம் இக்கலியுலகில்
மாதவம் செய்திடல் வேண்டும்.
முதுமையில் முகம் சுளிக்காமல்
அரவணைக்கும் உறவுகள் அமைந்திட
மாதவம் செய்திடல் வேண்டும்.
உன்வாழ்வு சிறக்க, தன்உதிரம்
தனை உறுஞ்சிக் கொடுக்கும்
பெற்றோர் அமைந் திடவும்
மாதவம் செய்திடல் வேண்டும்.
மனிதன் மனிதநேயம் மறக்காது
நன் மனிதனாய் வாழ்ந்திட
மாதவம் செய்திடல் வேண்டும்.