பாசப் பறவைகள்
வானம் செஞ்சாந்து
பூசித்தனை அழகுபடுத்தும்
அதிகாலை நேரம்...
பல்வகை பறவைகளின்
பலவித கூச்சல்
கூக்குரலிடும் நேரம்...
இரைதேட தலைவர்
கூடுவிட்டு விலகும்
இளங்காலை நேரம்...
இரைதேடி மீண்டு,
பத்திரமாக வரக்கோரும்
நெகிழ்வான நேரம்...
பல்வகை ஆபத்துக்கள்
பின்தொடர, பரிவாரம்
பசியார இரைசேமிக்கும்
பாசமிகு நேரம்...
இரைதேடி திரும்பும்
தலைவனைக் கண்டு
சந்தோசக் கூச்சல்மிகும்
சாயங்கால நேரம்...
கூச்சல் அடங்கி
உண்டமயக்கம் தீர
ஆழ்ந்து உறங்கும்
இரவு நேரம்...
மீண்டும் அதிகாலையில்
ஒர்நிச்சய மற்றபயணம்
தொடரும் நேரம்...
பாசப் பிணைப்புமிகு
பறவைகள் பாங்காக
பரிவாரம் பராமரிக்கும்
அழகு இஃது..