அம்மன்
அம்மன்
நினைவில் நிழலாய் - அவள்
நிலைத் திருப்பாள்,
நிகழ்வில் சிலையாய் - அவள்
நின்று சிரித்திடுவாள் ...
மயக்கும் விழியால் - அவள்
மதியை மாற்றிடுவாள்,
மானுடர் மொழியால் - அவள்
மகிமையை பாடவைப்பாள்...
எந் திசைகளிலும் - அவள்
எழுந் தருளுவாள் ,
ஏகாந்த மதில்தான் - அவள்
ஏகமாய் மகிழ்வாள்...
சிந்தை தெளிந்தால் - அவள்
சீராய் செதுக்கிடுவாள் ,
சிந்தையில் நம்பினால் - அவள்
சிநேகம் கொள்வாள்...
மதுரையில் மீனாட்சி - அவள்
மாங்காட்டில் காமாட்சி,
மணக்குடியில் நல்லநாயகி - அவள்
மாயவரத்தில் திரெளபதி அம்மன்...
ஆயிரம் பெயரில் - அவள்
அவதரித் திடுவாள்,
ஆயினும் அன்பாய் - அவள்
அரவனைத் திடுவாள்...