அலையின் காதல்

வானளாவ எம்பிட பார்க்கும் கடலலை,
ஏனோ இக்கடல் அலைக்கு நீலவான
வெண்ணிலவு மீது மீளாக் காதல்,
எம்பி எம்பி மேலெழுந் தாலும்
வான்நிலாவை எட்ட முடியாது கடல்நீரில்
விழுகின்றது முடிவில் இப்போது திண்ணமாய்
அக்கடல் அலையோ கடற்கரை மணலை
இப்போது தஞ்சம் அடைந்தது' மணலே
என்காதலை ஏற்பாயோ' என்றே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Apr-23, 9:01 pm)
Tanglish : alayin kaadhal
பார்வை : 115

மேலே