ஒருமுறைபார் போதும் எனக்கு

ஒருவிழியில் காதல் ஒருகீதம் இன்னும்
ஒருவிழி யோஎன்னை ஓர்கவிஞன் ஆக்கும்
இருவிழிகள் ஆட இலக்கியம் பேசும்
கருவிழியில் காதல் கலை

ஒருவிழியில் காதல் ஒருகீதம் இன்னும்
ஒருவிழி யால்கவிநான் ஓர்நாள் -- கருமை
இருவிழிகள் ஆட இலக்கியம் பேசும்
கருவிழியில் காதல் கலை


ஒருவிழியில் காதலின் இன்னிசை இன்னும்
ஒருவிழி யோகவிதை ஏந்திய பேழை
இருவிழிகள் ஆட இலக்கியம் பேசும்
ஒருமுறைபார் போதும் எனக்கு



ஒருவிழியில் காதலின் இன்னிசை இன்னும்
ஒருவிழி யோகவிதை ஊற்று --கருமை
இருவிழிகள் ஆட இலக்கியம் பேசும்
ஒருமுறைபார் போதும் எனக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (18-Apr-23, 7:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 104

மேலே