காயம் பட்ட என் இதயம் 555

***காயம் பட்ட என் இதயம் 555 ***


ப்ரியமானவளே...


உன் புருவத்தை
வில்லாய் வளைத்து...

உன் பார்வையை
அம்பாய் நாணேற்றி...

என்மீது நீ
காதல் அம்பு தொடுத்தாய்...

காயம் பட்டு
சரிந்த என் இதயம்...

உன்மீது
காதல் கொண்டது...

காயம் பட்ட
இதயத்திற்கு மருந்திடுவாயா...

காதல் கொண்ட இதயத்திற்கு
உன் இதயம் கொடுப்பாயா...

பல உறவுகள்
என்னுடன் இருந்தும்...

நான் கட்டியணைக்க
நினைத்த உறவு நீதான்...

கானகத்திற்கு நான் சென்றால்
வழி துணையாக நீ வேண்டும்...

இருளில் பயணம் செய்தால்
வெளிச்சமாக நீ வேண்டும்...

நான்
தடுமாறும் நேரத்தில்...

என்னை தங்கி பிடிக்க
உன் கைகள் வேண்டும்...

சிகரத்தை நான் தொட்டாலும்
ஊன்றுகோலாய் நீ வேண்டும்...

எல்லாமாக என் வாழ்வில்
நீ வேண்டும் என்றும்...

என்
உயிரில் கலந்த உறவே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (26-Apr-23, 4:42 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 310

மேலே