புன்னகைப் பூவிழியே
பூக்கள் தொடுத்திடும் புன்னகைப் பூவிழியே
பாக்களை நான்புனைய பாமலர்ச்சொல் தந்திடுவாய்
பூவினைக் கூந்தலில் சூடி அழகுபார்
நாவின்பா வால்பார்ப்பேன் நான்
பூக்கள் தொடுத்திடும் புன்னகைப் பூவிழியே
பாக்களை நான்புனைய பாச்சொல்தா --பூக்காரி
பூவினைக் கூந்தலில் சூடி அழகுபார்
நாவின்பா வால்பார்ப்பேன் நான்