குண்டு தாத்தா குண்டு பேரன்

குண்டு பேரன்: தாத்தா உங்களுக்கு எவ்வளவு பல்லு இருக்கு?
குண்டு தாத்தா: முப்பத்திரண்டு பல்லும் இருக்குடா
குண்டு பேரன்: இது ரொம்ப அநியாயம் தாத்தா, எனக்கு நாலு பல்லுங்க விழுந்திடுச்சு. உங்களுக்கு என்னடான்னா முப்பத்திரண்டு பல்லும் இருக்கு. அதெப்படி?
குண்டு தாத்தா: அது ஒன்னும் இல்லடா. பத்து வருஷங்களுக்கு முன்பு எனக்கு முப்பது பல்லுங்க விழுந்திடிச்சி. மீதி ரெண்டு பல்லுமட்டும் எதுக்குன்னு நானே அந்த இரண்டு பல்லையும் பிடுங்கிவிட்டுட்டேன்.
குண்டு பேரன்: அப்படீன்னா உங்களுக்கு ஒரு பல்லும் இருக்கக்கூடாதே, பின்னே எப்படி மொத்த பல்லும் இருக்கு?
குண்டு தாத்தா: டேய், மொத்த பல்லும் இல்லைனா நான் எங்கிருந்துடா சாப்பாடு சாப்பிட முடியம்? எப்படி வறுவல் அப்பளம் எல்லாம் சாப்பிட முடியும்? ஆகையினாலே, பல் டாக்டரிடம் காட்டினேன். முப்பதாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு அவர், எனக்கு முப்பத்திரண்டு பொய்ப்பற்களை கட்டிவிட்டார்.
குண்டு பேரன்: ஓஹோ, அப்படியா தாத்தா, அப்போ நீங்க பல் தேய்க்கவேண்டிய அவசியமே இல்லைதானே?
குண்டு தாத்தா: ஆமாண்டா. தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த பல்செட்டை கழட்டி வச்சிடுவேன் ஆனால் தினமும் இந்த பல்செட்டை குளிப்பாட்டிவிடவேண்டும். அப்புறம்தான் திரும்பி வாய்க்குள்ள வச்சிக்கமுடியும்.
குண்டு பேரன்: தாத்தா எனக்கும் இதைப்போல பல்செட்டு வாங்கிபோட்டுடுங்க. காலைல எழுந்து பலதேய்க்கிற இந்த போரான வேலை குறையும்.
குண்டு தாத்தா: ரொம்பவும் சரிதாண்டா பேரனே. அதற்கு முன்பு உன் இருபத்தியெட்டு ஒரிஜினல் பற்களையும் பிடுங்கி எடுக்கணும், அதுக்கே குறைந்தது இருபதாயிரம் ரூபாய் ஆகிவிடும். எல்லா பல்லையும் ஒரே நேரத்தில் எடுக்கமுடியாது. உன் எல்லா பற்களையும் பிடுங்கி எடுக்கணும்னா கிட்டத்தட்ட இரண்டு மாசமாவது ஆகும்.
குண்டு பேரன்: எனக்கு இன்னும் ரெண்டு மாசம் பள்ளி விடுமுறைதான் தாத்தா. நான் பற்களை பிடுங்கிக்கொள்ளத் தயார்.
குண்டு தாத்தா: நீ தயார், உன் தாயார் தயாரா இருக்கமாட்டா. இந்த விஷயம் அவளுக்குத்தெரிந்தால் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது எனது பல்செட்டை எடுத்து, வீட்டில் உள்ள மாவரைக்கும் இயந்திரத்தில் போட்டு பல்பொடி செய்துவிடுவாள். அந்தப்பொடியில்தான் நான் வாய்கொப்புளிக்கவேண்டும் என்று சொல்லிவிடுவாள். அப்புறம் எனக்கு நாலு வேளையும் பாலும் பழமும்தான் கிடைக்கும். அது தவிர தினமும் எனக்கு நல்ல அர்ச்சனையும் கிடைக்கும். இதெல்லாம் எனக்குத் தேவைதானா?
குண்டு பேரன்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (1-May-23, 9:37 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 104

மேலே