சதிராடும் புதிர்

பிரபஞ்சம் என்றால் என்ன?
இங்கே எல்லாவற்றிற்கும் பஞ்சம்.

சூரியன் யார்?
சூர்யா விளக்கைபோலப் பலமடங்கு பிரகாசிக்கும் மாபெரும் நெருப்பு விளக்கு.

கடல் என்பது என்ன?
உலகத்தில் எழுபது சதவிகிதம் இருந்தாலும் அதில் ஒரு வாய்கூட நம்மால் குடிக்கமுடியாத மோசமான தண்ணீர்

வாய்ப்பாடு என்றால் என்ன?
சில வேலையற்றவர்கள் அவர்களது பொழுதுபோக்கிற்காக அமைத்த வெட்டிவேலை.

மனிதன் என்பவன் யார்?
அப்படீன்னா என்னங்க

பணம் குணம் எது உயர்ந்தது?
எனக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா, உங்களுக்கு இந்த இரண்டில் எது பிடிக்குமோ அதுதான் உயர்ந்தது.

ஒழுக்கம், நாணயம் பற்றி?
ஒழுக்கம் திருக்குறளில் சொல்லப்பட்டு நாணயத்தால் பறிக்கப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா வித்தியாசம்?
இந்தியாவில் ஒரு திருமணம், ஒரு மனைவி
அமெரிக்காவில் பல திருமணங்கள், பல மனைவிகள்.

உங்களுக்கு மிகவும் பிடித்தது?
அதைச்சொன்னா என் மனைவிக்குப் பிடிக்காது

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Apr-23, 5:15 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 68

மேலே