உயர்வடைய உயரிடமே சேர்தல் வேண்டும் - நீதி வெண்பா 2
நேரிசை வெண்பா
அரிமந் திரம்புகுந்தால் ஆனை மருப்பும்
பெருகொளிசேர் முத்தும் பெறலாம் – நரிநுழையில்
வாலுஞ் சிறிய மயிரெலும்புங் கர்த்தபத்தின்
தோலுமல்லால் வேறுமுண்டோ சொல். 2
- நீதி வெண்பா
பொருளுரை:
சிங்கத்தின் குகையில் நுழைந்து பார்த்தால் யானைத் தந்தங்களையும், மிகுந்த ஒளியினை உடைய முத்துக்களையும் பெறலாம்;
நரிகள் வாழும் குழியில் கழுதையின் வாலும், மயிரும், எலும்புகளும், தோலும் அல்லாமல் வேறு உயர்வான பொருட்களும் இருக்குமா என்று சொல் என்று இப்பாடலில் சொல்லப்படுகிறது.
கருத்து:
பெரியோருடன் இணங்கியிருந்தால் உயர்வும், சிறியோரைச் சேர்ந்தால் இழிவும் ஏற்படும்.