ஹைக்கூ
1.
மாலைப் பொழுது/
மனஅமைதி தருகின்றது/
தூங்கும் நேரம்/
2.
மழையின் ஓசை/
எங்கும் கேட்கிறது/
தவளைச் சத்தம்/
3.
மாலைப் பொழுது/
நிறைவினைத் தருகின்றது/
கைக்கூலி/
4.
கடல் காற்று/
இதமாய் இருக்கிறது/
பழைய நினைவுகள்/
5.
நெல் விளைச்சல்/
குறைவாக இருக்கிறது/
வாய்க்கால் நீர்/
6.
வான் மேகம்/
அசைந்தோடுகின்றது/
வானூர்த்தி/
7.
கோடை மழை/
குதூகலமாய் இருக்கின்றது/
பள்ளி விடுமுறை/
8.
நீரின் ஓட்டம்/
அழகாய் இருக்கின்றது/
மரங்களின் அசைவு/
9.
கோடை மழை/
அழிவைத் தருகின்றது/
தொற்று நோய்/
10.
அடை மழை/
நிரம்பி வழிகின்றது/
ஓட்டை வீடு/
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா