உனக்காக வாழ்கிறேனடி நான் 555
![](https://eluthu.com/images/loading.gif)
***உனக்காக வாழ்கிறேனடி நான் 555 ***
உயிரானவளே...
கோடி கோடி இதயங்கள்
பூமியில் வாழ்கிறது...
என் இதயமோ உன் ஒரு
இதயத்தை மட்டும் தேடுகிறது...
விண்ணில் கோடி
விண்மீன்கள் இருந்தாலும்...
நிலவை ரசிக்கவே
காத்திருக்கு மனது...
சிரிக்கும் உன்
செங்காந்த இதழ்கள் வேண்டும்...
என்னை கவர்ந்த
உன் மான் விழிகள் வேண்டும்...
என்
கன்னம் தழுவி சென்ற...
உன் கருங்கூந்தல்
பாய்போட வேண்டும்...
தினம் தினம் நான் கவிபாட
உன் செவிகள் வேண்டும்...
எனக்கு உன் உடலால் குடைபிடிக்க
உன் நிழல் வேண்டும்...
தங்க கொலுசுமாட்டி
அழகு பார்க்க...
உன்
கணுக்கால் வேண்டும்...
நான் முதல் முத்தம் வைக்க
உன் பிறை நெற்றி வேண்டும்...
என் மஞ்சள்
கயிறு தாங்கிக்கொள்ள...
உன்
சங்கு கழுத்து வேண்டும்...
நீயும்
நானும் மறுபிறவி எடுக்க...
உன்
கன்னிமாடம் வேண்டும்...
பேரழகே எப்போது கிடைக்கும்
இவை எல்லாம் எனக்கு.....
***முதல்பூ.பெ.மணி.....***