அன்னையர் தினம்- கவிதை

தானுருகி கரைந்தாலும் இறுதி வரை
தன்னொளி பரப்பி இருளைப் போக்கும்
மெழுகு வத்திபோல் அன்னை யவள்
தன்னையே அர்ப்பணித்து குடும்பத்தின்
இருளெல்லாம் போக்கி ஒளி பரப்பும்
தியாகி அவனியில் அன்னைக்கு ஈடுண்டோ
ஒப்பாரும் மிக்காரும் இலையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-May-23, 1:02 am)
பார்வை : 582

மேலே