ந மு வே நாட்டாரின் யாப்பு எடுத்துக் காட்டுகள்
சோலை யதார்த்த காத்திடைக்
(தேமா புளிமா கூவிளம்)
காலை யார்கழ லாரப்பவும்
(தேமா கூவிளம் தேமாங்கனி)
மாலை மார்பன் வருமாயின்
(தேமா தேமா புளிமாங்காய்)
நீல உங்க ணிவள்வாழுமே
(தேமா தேமா புளிமாங்கனி )
ஒவ்வொரு அடியிலும் வேறுபட்ட வாய்ப்பாட்டில் அமைந்த
ஒரே அடி எதுகை சிந்தடி அல்லது முச்சீர் நாலடி
வஞ்சி விருத்தம்
வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மௌவல்
நளிர்க்கொடியன நறுவிரையன நகுமலரன வகுளம்
குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கோங்கம்
ஒளிர்க்கொடியன வுயர்ந்தளிரினொ டொழிகிணரன வோடை
(கனி கனி கனி மா சீர்களே ஒவ்வொரு அடியிலும் வாய்ப்பாடாக அமைந்த ஒரே அடி எதுகை நாற் சீர் நாலடி
கலி விருத்தம்
--இவை ந மு வேங்கட சாமி நாட்டாரின் யாப்பருங் கலக்காரிகை நூலுரையில் எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்ட
பாவினைச் செய்யுள்கள்
மேலும் சில யாப்புசார் தகவல்கள் சொல்கிறேன்
சிறந்த யாப்பாசிரியர் அல்லது யாப்பு நூல் வழி மட்டுமே
பயில்வோர் தெரிந்து கொள்ளுதல் சாலச் சிறந்தது