விழியில் கவி எழுதும் மலரே 555

***விழியில் கவி எழுதும் மலரே 555 ***


ப்ரியமானவளே...


நம் முதல் சந்திப்பிலும்
முதல் வார்த்தையிலும்...

எனக்கு அப்போது
தெரியாயவில்லை...

நீதான்
என்னுடைய உயிராகவும்...

உறவாகவும்
இருக்க போகிறாய் என்று...

கவி எழுதும் உன் விழிகளை
எப்படி நான் வாசிப்பேன்...

உன் விழிகளுக்குள்
இருப்பது நான் தானே...

உன் இதழ்களின் ரேகைகளில்
எத்தனை கவிகள் வரிவரியாக...

உன் இதழ்களை
ருசிக்கும் போது...

உன் இதழ்
கவிகளோ எனக்குள்...

உன் மாங்கனி கன்னம்
ருசிக்கையில் எதற்கு அலறுகிறாய்...

உன் செவியில் காதலை சொல்ல
எதற்கு கூச்சத்தில் சிணுங்குகிறாய்...

பௌர்ணமி
நிலவாய் ஜொலிக்கும்...

உன் பூ முகத்தை
எப்படி வர்ணிக்க நான்...

என் உயிரில்
கலந்த உறவே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (20-May-23, 5:48 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 278

மேலே