தனித்துவமான நம் தனிமை
"எங்கும் எதிலும்
எதற்கும் என்றும்
எதிர்படும் தனிமை
நம் ஏக்கத்தில் ஓய்ந்திடும் நம் தனிமை
நம் பெருமூச்சினில் அசைபோடும் நம் தனிமை
நம் பேச்சினில் உழைத்திடும் நம் தனிமை
நம் மூச்சினில் பிழைத்திடும் நம் தனிமை
நம் முகரேகையில் பளிச்சிடும் நம் தனிமை
நம் கைரேகையில் தூங்கிடும் நம் தனிமை
அனைவரின் வெற்றியில் போற்றிடும் நம் தனிமை
அனைவரின் தூற்றலில் கற்றிடும் நம் தனிமை
அனைவரின் கண்ணடியில் தனித்துவிடும் நம் தனிமை
அனைவரின் சொல்லடியில் தனிமையாகும் நம் தனிமை
அனைவரின் கல்லடியில் கனமாகும் நம் தனிமை
அனைவரின் காலடியில் ஓடிடும் நம் தனிமை
அனைவரின் கலகத்திலும் கலங்கிடும் நம் தனிமை
அனைவரின் கண்ணீரில் கரைந்திடும் நம் தனிமை
இங்கு, நம்பி வாழ்ந்தவன்
நம்பிக்கைக்குரியவன் தனிமை
தனித்துவமான நம் தனிமை"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
