உறவோடிரு என்றும் உறவாடிடு

"உறவோடிரு என்றும் உறவாடிடு
கனத்த இதயத்தை என்றும் சுமக்காதே
குழந்தைகள் குலத்தை தருவிக்கலாம்
இளந்தளிரும் மனதை லேசாக்கலாம்
இளைய வயதும் இணக்கமாகலாம்
நடுத்தர வயதும் நாட்டாமை பேசலாம்
பழுத்த வயதும் பழுதை நீக்கலாம்
முதிர் கன்னியும் முயன்றதைக் கொடுக்கலாம்
உடல் ஊனமும் உலகத்தைச் சுற்றலாம்
நோயாளியும் நோயை விடுவிக்கலாம்
அதனால்,
என்றும் உறவோடிரு என்றும் உறவாடிடு"

எழுதியவர் : சு.சிவசங்கரி (23-May-23, 2:49 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 482

மேலே