எனக்கு சொந்தமான என்னவரே

எனக்கு சொந்தமான என்னவரே
-------------------------------------------------------

பளுதூக்கும் காளையரே
பார்த்ததும் பழுதானேன்/
வெளுவெளுத்த முகமும்
வெண்சங்காக வெண்மையானதே/

வெட்டவெளி வானமாக
வெறிச்சோடிய உள்ளமதில்/
வட்டவடிவப் பலவண்ண
வானவில்லாக நினைவுகளே/

பூமியாய் நேர்கோட்டில்
பூவையும் சுற்றுகிறேன்/
திமிராகப் பார்க்காது
திரும்பாது போரவரே/

சோழி போட்ட
சோசியனும் சொல்லியாச்சு/
தோழியெனுக்கு மாப்பிள்ளை
தோழனாகி நீதானென்றே/

கனவுகள் மெய்ப்படும்
கரம் பற்றுவது/
எனக்கு சொந்தமான
என்னவரே நீயானால்/

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Jun-23, 10:06 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 103

மேலே