காதல் தூது

நதியாய் எழிலாய் நடந்து வந்தாள்
கதியாய் காத்து நின்றேன் எனக்கு
விரி கமல விழியால் பார்வைத்தந்து
எழிலாம் கமலக் கரங்களில் ஏந்தி
வந்தாள் என்னிடம் தந்தாள் காதல்
இரசாயனம் கவினான் அதை ஏற்று
என்மதி மயக்கிய மங்கை அவளுக்கு
இந்த கவிதை வரிகள் மடல்வடித்து
மட மன்னமிடம் தந்து என்மனம்
உன்னிடம் ஏற்றுக்கொள்வாயா என்று
தூது அனுப்பிவைத்தேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jun-23, 8:13 pm)
Tanglish : kaadhal thootu
பார்வை : 62

மேலே