மனைவி

மனைவி
××××××××
பிறந்த இல்லம் துறந்து
புகுந்த மனை பணிந்து
மிகுந்த குணத்தால் கனிந்து
துணிந்த செயலால் தெளிந்து

இறைவன் தந்த வரமவள்
நிறைவான இல்லறமாக்கும் தாரமவள்
கூரையை கோபுரமாக்கும் திடமவள்
கரையும் மெழுகாக தியாகமவள்

மனைவி தாய் மருமகளென
மாறுபட்ட உறவுகளின் மகிமையவள்
அனைவர் மனதறிந்து பணிபவள்
அவளின்றி அமையாது இல்லறம்

விளக்கேற்றி விடியல் தந்து
வேலைக்காரியாக துறவறம் பூண்டு
அடுப்படியல் தவப்பலம் அடைந்து
அடுத்தவர்களுக்காக சாம்பாலாகும் பிறவியவள்

சமதத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பொதிகை மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (9-Jun-23, 8:11 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : manaivi
பார்வை : 767

மேலே