சொல்வாயோ செல்லக்கிளி

சொல்வாயோ செல்லக்கிளி
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

திருவாரூர் தேரோட்டம் உன்மேல எனக்கு கண்ணோட்டம்/
தெருவெங்கும் கூத்தாட்டம் நான் மட்டும் உன்னாட்டம் /
பார்த்தவுடன் கண்ணில் பதிந்திருச்சு மனதுக்கு பிடித்திருச்சு/
சித்திரை பிறந்திருச்சு சிற்றோடை தண்ணீர் தெளிந்து/
வெள்ளத்தில் நீருடன் வந்த நுண்மணல் தெரிந்திருச்சு/
வேப்பம் மரமெல்லாம் பூ பூத்து குலுங்கிருச்சு/
ராசாத்தி உன் பதில் சொல்ல வில்லை/
இரவு முழுவதும் நினைப்பால் தூக்கம் இல்லை/
நினைவின்றி தன் செயல் மறந்து தவிக்கிறேன்/
நலமுடன் வாழ காதல் சொல்வாயோ செல்லக்கிளி /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Jun-23, 6:05 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 39

மேலே