அவளும் நானும்

நான் பாடவில்லை ஆடவில்லை ஆனால்
என்முன்னே அவள் ஆடிவந்தால் பாடியே
பின்னே புரிந்தது அவள் சொல்லும்போது
' அன்பே உந்தன் பார்வையின் ஒளிஅலைகள்
என்னை ஆடவைத்தது பாடவும் எப்படி
மகுடி ஓசைக்கு படம் விரித்தாடும் நாகம்போல'
என்றாள் நான் வியக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Jun-23, 7:26 am)
Tanglish : avalum naanum
பார்வை : 200

மேலே