இருளும் ஒளியும்

இருள் : ஒளியிலே தெரிவது தேவதையா..
ஒளி : இருளிலே தெரிவது பேயா இல்லை முனியா..

இருள் : ஒளியேஉன்னை பெருமையாத்தானே பாட்டு படிசேன்..
நீ என்ன மட்டம் தட்டி படிக்கிறடி...
ஒளி : இருளில் தேவதையக் கண்டாளும் பேயத்தான் தெரிவாள் ..

இருள் : ஒளியில் தேவதையாக மட்டுமே தெரிவாள்..இருளில் மட்டுமே ரசனையாகத் தெரிவாள்..

ஒளி : அடியே என் நிறம் கலர்புல் .. ...உன் நிறம் கருப்புடி

இருள் : சூரியன்,விளக்கு,லைட்டுனு அடுதவர்களை நம்பி இருந்து அண்டி பிழைக்கிற உனக்கு இவ்வளவு ஏத்தம்...

ஒளி : அடியே நீ ஒரு தனி மரம்..

இருள் : அடியே யாருடி தனிமரம்..தனிமரமா திரியுத கழுதைகளை சேர்த்து வைத்து தோப்பாக்கிறவாடி நானு..

ஒளி : ....!

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Jun-23, 5:58 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : irulum oliyum
பார்வை : 133

சிறந்த நகைச்சுவைகள்

மேலே