ஊட்டியும்,காஷ்மீரும்

ஊட்சி : காஷ்மீர் உன் காட்டுல ஒரே குண்டு மழைதான் போல

காஷ்மீர் : குண்டு மழை பொழியுறதால என்னுடைய பசுமை அப்படியே இருக்கு...

பனிமழை பொழிந்து குளுமையான தட்பவெப்பநிலையில் சிலு சிலுனு இருப்பதால உன் பசுமையை சீரழித்து கட்டிடம் கட்டிட்டாங்க...

ஊட்டி : கட்டிடம் கட்டி அழிச்சாலும் திட்டமிட்டு வெள்ளத்தை வரவச்சு கட்டம் கட்டி அவங்களை கூண்டோடு அழித்துதான் பார்க்கிறேன் திருந்த மாட்டன்றேன் மனிதன்..

காஷ்மீர் : இத்தனை கொடுமையிலும் ரோஜாவாக பூத்து குலுங்கி சந்தோஷமாக இருக்கிறாயே...

ஊட்டி : ஏண்டி நீ ராஜாவாக இந்தியா தலையில் இருந்து தலைக்கனம் இல்லாம இருக்க வெரி கிரேட்..

காஷ்மீர் : சீனா ஒரு பக்கம் பாகிஸ்தான் ஒரு பக்கம் இந்தியா ஒரு பக்கம் பன்ற வால்தனத்துல தலைக்கனம் எங்க பன்றது..

ஊட்டி : ....!

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Jun-23, 5:58 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 125

சிறந்த நகைச்சுவைகள்

மேலே