தக்காளியும்வெங்காயமும்

தக்காளி : நான் பூமிக்கு மேல கும்முனு பிறப்பேன்
வெங்காயம் : நான் பூமிக்கு கீழ கம்முனு பிறப்பேன்..
தக்காளி: நான் கலர்ல டாப்பூ
வெங்காயம் : நான் கலர்ல டூப்பூ
தக்காளி : நான் சாம்பார்ல ருசிப்பேன்
வெங்காயம் : நான் சாம்பார்ல மனப்பேன்

தக்காளி : என்னை உரிக்க உரிக்க விதை தருவேன்
வெங்காயம் : என்னை உரிக்க உரிக்க
தக்காளி : உரிக்க உரிக்க ...ஏய்... சொல்லு சொல்லு.. ம்ம்..ஒன்னுமே இருக்காது வெங்காயம் வெங்காயம்
வெங்காயம் : உரிக்க உரிக்க உரிப்பவனுக்கு ஆனந்தத்தை தருவேன்
ஓநாய் திங்கிற பழம் நீ ஏங்கிட்டே மோதாதே ஜாக்கிரதை..

தக்காளி : பன்னிக்கு பயந்து பூமிக்கு அடியில் விளையுற உனக்கெல்லாம்..வாய் ..அது என்னடி ஆனந்தம்..கீனந்தமுனு உலறுத..
வெங்காயம் : என்னை உரிக்கிறவன் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறத பார்த்ததில்லையா..

தக்காளி : ...!

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (15-Jun-23, 5:53 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 206

மேலே