கூடி முயங்கப் பெறின்

கூடி முயங்கப் பெறின்
//////////////////////////////

காதலின் தொடக்கமும்
கல்யாணத்தின் முடிவும் /
ஊடல் கூடல்
உணர்வுகளின் மகிமை/

பகலின் பகையை
பிணைப்பில் ஒளிரும் /
இரவும் பகலாக
இருவர் இணைவில்/

அமிர்தமானாலும் இன்பமெனிலும்
அளவோடு கொண்டால்/
துன்பமில்லா வாழ்வில்
துயரின்றி வாழலாம்/

பூவில் தேனை
பருகும் வண்டாக/
செவ்விதழ் முத்தம்
செருக்கை மறைக்கும் /

ஊடலின் பேச்சில்
உதடாலின்றி உள்ளமிருந்துவரும் /
வார்த்தையில் தம்பதிகளின்
வேற்றுமை நீங்கும்/

கூடலும் குறைக்கும்
கோபத்தையும் தாபத்தையும் /
இன்பமுடன் இன்புற்று
இனிமையாக வாழ்வோம்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (21-Jun-23, 6:18 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 33

மேலே