கண்டாங்கி சேலைக்காரி

கண்டாங்கி சேலைக்காரி
₩₩₩₩₩₩₩₩₩₩₩₩

கண்டாங்கி சேலைக்காரி
கனகாம்பரக் கொண்டைக்காரி /
கெண்டைமீனு கண்ணுக்காரி
கிளிமூக்கு உறவுக்காரி /

பச்சரிசி பல்லுக்காரி
புன்னகைக்கும் சொந்தக்காரி /
செந்தூரப்பூ உதட்டுக்காரி
சொக்கவைக்கும் பேச்சுக்காரி /

இடையழகில் சொக்கும்காரி
இன்னல்தரும் குசும்புக்காரி /
காதலத்தான் சொல்லு மாரி
காலமெல்லாம் வாழ்வோம் வாரீர்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (21-Jun-23, 6:17 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 54

மேலே