அத்த பெத்த அச்சு முறுக்கே

அத்த பெத்த அச்சு முறுக்கே
××××××××××××××××××××××××××
ஆண் : அத்த பெத்த அச்சு முறுக்கே
அறுவடை செயகையில் ஏன் வாரக் குறுக்கே
தந்திர மந்திரத்தால் மயக்காதே கிறுக்கே-உன்
திமிரக் கொஞ்சம் தள்ளி ஓதுக்கே..

பெண் : முத்தமிட்டு களைப்புத் தீர்க்க வந்தேன் எதிரே
சத்தமிட்டு விரட்ட நினைக்காத எந்தன் உயிரே
எத்தனித்தால் உன்னை முந்தியில் முடிச்சுடுவன் பயிரா
ஐத்தான் உன் சூட்டைக் குறைக்க கொடுக்கட்டுமா மோரை

ஆண் : காற்றடிக்க மலரும் மொட்டும் நானல்ல
தோற்கடித்து மடி சாய்க்க மாதவியே  கோவலனல்ல
வக்கிரம் கொண்டு துயிலுரிக்கும் துரியோதனன் நானல்ல
பக்கம் நின்றாலும் தொடாத நிழல் நானடி

பெண் : பூவின் வாசத்தை உறிஞ்சும் காற்று நானே
காதலால் கைபிடிக்கும் மாதவி நானே
தீக்குளித்தவது உன்னோடு வாழுத்துடிக்கும் சீதைநானே
வெக்கமின்றியே பாதம் தொடரும் நீழல் அவேன்

ஆண் : வேசம் போட்டு ஆளை மயக்குறியே
பாசம் காட்டி பாயயை விரிக்கிறியே
மோசம் போக காமம் விதைக்கிறியே
மாசம் பத்து சுமக்க போகிறியே...

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (25-Jun-23, 7:21 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 60

மேலே