கண்ணன் குழலோசை
கண்ணன் குழலோசை
----------------------------------------
கண்ணன் குழல் ஓசைக்கு, அந்த
பண்ணில் அவன் பூட்டி வைத்தது
என்ன மாயமோ மாயவன் தெரியலையே
அவன் ஊத ஊத புவனமெலாம்
மெய்மறந்து போயின; ஆவினம் புல்மேய
மறந்து அவன் காலடியைத் தழுவ
கூவும் குயிலும் கூவ மறந்தது
கானகத்து மரங்களும் கூட கிளைகளை
வளைத்து ஆய்ச்சிறுவனுக்கு வந்தனம் செலுத்த
ஓடும் யமுனையும் வளைந்து வந்து
கண்ணன் கழல்கள் தழுவி வணங்கிட
தத்தி பாயும் குரங்கும் தத்தாது
பணிவோடு கீழிறங்கி கண்ணன் பாதங்கள்
தொழுதிட ஆறுமையில் ஆடல் மறந்து
கண்ணன் கீதம் கேட்டு மகிழ்ந்திட
இயற்கை இப்படி மாயவன் கீதையில் ,
ஆயன் கண்ணனின் இறைவன் கண்டிட
ஆணவ மயக்கத்தில் மனிதனோ அந்த
இடைச்சிறுவனை குழலூதும் இடையன்
என்றே எண்ணி இருந்தாரே