பதிலாய்க் கண்களில் கண்ணீர் மட்டுமே - நிலைமண்டில ஆசிரியப்பா

நிலைமண்டில ஆசிரியப்பா

புதிரா யவள்நினை வென்னைக் குடைய,
மதிபோல் பெண்ணுக் கென்கையும் மடல்தீட்ட
அதிகா லைப்பொழு திலேதூ தும்விட
இதிகா சங்கள் கூறும் பெண்ணவள்
பதியி லேகொலு வீற்றிருப் பாள்,தேன்
எதிர்பார்த் தவளும் யன்னல் கதியாய்
குதித்தெழுந் தே,மனம் குமுறத் தொடங்க
பதிலாய்க் கண்களில் கண்ணீர் மட்டுமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jul-23, 9:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

மேலே