காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 9

9. திலோவின் வீடு

குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குக்கூ ......... இனிமையான குயில் இன்று பொருமை இன்றி கதறியது.

வர்றேன் வர்றேன் அட கொஞ்சம் பொருமையா இருங்க இப்ப என்னா அவசரம் என்றபடி தன் பருத்த சரீரத்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வழக்கத்துக்கு மாறாக வேக வேகமாக வாசலை நோக்கி நடந்து இல்லை இல்லை
ஓடி வந்தார் கஜலெக்ஷ்மி.

(அந்த நாட்களில் திலோத்தமாவை வளர்த்து எடுக்க சிறு பெண்ணாக இருக்கும் போது கஜலெக்ஷ்மி இங்கு வேலையில் சேர்ந்தார் என்றாலும், இன்றைய அவர் வயதைக் கருத்தில் கொண்டு அவரை மரியாதையாக "அவர்" என்றே நாம் அழைப்போம்.)

கோன் ஹை தர்வாஜே பர், இத்னா ஹவாஜ் க்யூன் கர்ரஹா ஹை என்று மாடியில் இருந்து அம்ரித்வாணி கத்தினார்.

யார் டோர் பெல் அடிக்கிறது என்றபடி கோபாலகிருஷ்ணன் கழுத்தில் கட்டிக் கொண்டிருந்த டையை சரி செய்தபடியே வந்தார்.

அதற்குள் கதவை திறந்திருந்த கஜலெக்ஷ்மி அட நம்ம மாப்பிள்ளை தம்பி என்றபடி உள்ள வாங்க தம்பி என்று உபசரிக்க ஆரம்பித்தார்.

அங்கு வந்து சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ரகுராமனை கண்டு அவன் முக பாவனையில் மனம் குழம்பினார். சிறு கோபம், ஆற்றாமை அத்துடன் பதற்றமும் சேர்ந்த கலவையான மனோபாவம் அவனில் தெரிய என்னவாயிற்று என்று குழம்பிய படி வாங்க ரகுராமன் உள்ள வாங்க என்றார்.

அப்போது தான் ஞாபகம் வந்தது அவருக்கு, ஆமா திலோத்தமா எங்க? என்றார். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இங்க வரப் போறதா திலோத்தமா சொன்னாள்.

மாடியில் இருந்து கீழே வந்து கொண்டிருந்த திலோத்தமாவின் தாய் அம்ரித்வாணி...

க்யா ஹுவா(என்ன ஆச்சு), திலோ பேட்டி கஹாங் ஹை(திலோ எங்கே)?

ரகு க்யூன் அகேலா ஆயா ஹை (ரகு ஏன் தனியாக வந்திருக்கிறார்) என்றார்.

திலோவின் தந்தை என்னவென்று கேட்கும் முன்பே படபடப்புடன் கேள்வி மேல் கேள்வியாக அடுக்க ஆரம்பித்தார் அம்ரித்வாணி.

இவ வேற நேரம் காலம் தெரியாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுகிட்டு என்று மனதில் தோன்றிய சலிப்பை வெளிக் காட்டாமல், கோய் பாத் எஹிங் ஹை (ஒன்றும் இல்லை)வாணி.

தும்ஹாரி தப்யத் கராப் ஹோ ஜாயேகி (உனக்கு உடம்புக்கு முடியாம போயிடும்), தும் ஜாவ் ஆராம் கரோ (போய் ரெஸ்ட் எடு) என்றார்.

அவளை ஒருவழியாக சமாதானப் படுத்தி அனுப்பி விட்டு ரகுராமனை நோக்கி திரும்பினார்.

மாப்பிள்ளை நீங்க மொதல்ல உட்காருங்க என்று சோஃபா வை காட்டினார்.

அங்க்கில், உட்கார நேரம் இல்லை நீங்க என்கூட வாங்க, அங்கு வந்து பாருங்க திலோத்தமாவை என்றான்.

எங்க வந்து பார்க்கனும் ஏதாவது பிரச்சினையா?

அவள் ஈ சி ஆர் ரோட்ல ஒரு லாங் ரைட் போவோமா ன்னு கேட்டாள்.

போனோம், வழியில் ஒரு ஆக்ஸிடென்ட் என்றவுடன்,

கோபாலகிருஷ்ணன், ஐய்யோ திலோவுக்கு என்ன ஆச்சு என்று பதற்றத்துடன் கேட்டார்.

பதற வேண்டாம் அங்க்கில் அவளுக்கு ஒன்றும் இல்லை. திலோ நன்றாக தான் இருக்கிறாள் என்ற பின் தான் கோபாலகிருஷ்ணன் மூச்சு சீராகியது.

வருங்கால மாமனாரை கவலையுடன் பார்த்தபடியே ரகுராமன், வரும் வழியில் தான் ஒரு ஆக்ஸிடென்ட் அதில் அடிபட்ட ஒரு குழந்தையை ஹோமுக்கு அனுப்ப மாட்டேன் என்று திலோத்தமா அடம் பிடிக்கிறாள் என்று ஒருவழியாக சொல்லி முடித்தான்.

அவன் கூறி முடித்த தோரணையும் , விஷயமும் ஒன்றும் அவருக்கு விளங்கவில்லை. முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போட்ட மாதிரி இது என்ன கூறுகிறான் இவன் என்று குழம்பிய படி என்னப்பா சொல்ற...

யாருக்கோ ஆக்ஸிடென்ட் நடந்தா அந்தக் குழந்தையை ஹோமுக்கு அனுப்ப மாட்டேன் என்று திலோத்தமா ஏன் அடம் பிடிக்கிறாள் என்றார்.

அதுதான் எனக்கும் புரியல நீங்களே அவளைப் பார்த்து பேசுங்க என்றான் விட்டேத்தியாக.

அவன் பேசிய விதத்திலேயே தெரிந்தது, அவளின் செய்கையினால் இவன் மனதில் காயம் ஏற்பட்டு உள்ளதென்று.

ஆஹா இது நல்லதில்லை, இவன் கோபத்தினால் தன் மகளின் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்று எண்ணியவாறு இவனை எப்படி சமாதானப் படுத்துவது என்று யோசித்தார்.

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு
மட்டும் தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்த்தி இல்லை என்று.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

என்று நா. முத்துக்குமார் எழுதிய பாடல் கோபாலகிருஷ்ணன் இதயம் தொட்ட வரிகள் கம்பீரமான குரலில் பாடி ஃபோன் கால் வந்திருப்பதை தெரியப்படுத்தியது.

கோபாலகிருஷ்ணன் பேசுவதை நிறுத்தி விட்டு ஃபோன் செய்வது யார் என்று பார்த்தார்.

அதில் " கமிஷனர் வினோத் குமார் மிஷ்ரா" என்று பெயர் ஒளிர்ந்தது.

.




சந்திப்போம்....

எழுதியவர் : கவிபாரதீ (26-Jul-23, 5:58 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 55

மேலே