மனச்சாட்சி காட்டிடும் மதிநிறை நல்வழி - கலித்துறை

கலித்துறை
(புளிமாங்காய் விளம் விளம் விளம் தேமா)

மனச்சாட்சி காட்டிடும் மதிநிறை நல்வழி போனால்
மனத்தில்தான் நிம்மதி மகிழ்வுடன் காணலாம் நாமே!
மனச்சாட்சி வேண்டிலை மதியது போதுமே என்றால்
மனச்சாட்சி உறுத்துமே மனஞ்சொலும் நீதியைக் கேள்,நீ!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jul-23, 7:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே