சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் -12
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் -12
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாகராசர்கள் குரு பகவானிடம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சங்கன் சிவனே ஆற்றல் மிகுந்தவனெனவும்
பதுமன் பெருமாளே ஆற்றல் மிகுந்தவனெனவும்
இருவருக்கும் போட்டி முத்திட
இருவரும் தக்கோலம் வருகின்றனர்
குரு பகவானிடம் விடை தேடி
குற்றால அருவியாக விழுதினை
கொண்ட ஆலமரத்தின் அடியில்
உத்கடி ஆசனத்தில் இருந்து
உலக மக்களுக்கு தானத்தை தருபவனே
தாமரை இதழாகப் புன்னகை மலரும்
திருமேனியை தரிசிப்பவரின் வினையை விரட்டுபவனே
தட்சிணாமூர்த்தியைக் குருவாக கொண்டு நவகிரகங்களுக்கும்
தேவர்களுக்கெல்லாம் குரு ஆனவனே
நான்கு வேதங்களையும் அறுபத்து
நான்கு கலையும் கற்று
ஞானிகளையும் மேதைகளையும் உருவாக்கும்
ஞானமிகு வியாழ பகவானே போற்றி
குருவை வணங்கி நாகராசர்கள் சந்தேகத்தை எழுப்ப
குரு ஒரு கனம் திகைத்து நின்றார்
அற்புதமான சந்தேகத்தை தீர்த்திடும் வழியை
அன்னை உமா தேவி கோமதியாக
அவதரித்து அருள்புரியும் சங்கரன்கோவில் சென்று
அருளுடன் இறைவியை வழிபடுங்கள்
சந்தேகம் தீருமென குரு கூறிடவே
சங்கரன்கோவில் வருகின்றனர் சங்கன் பதுமன்...
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்