சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் -11

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் -11
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆற்றல் மிக்கவர் சிவனா திருமால ?
திருமாலிடம் விடை தேடி நாகராசர்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பரந்தாமனிடம் பதில்தேடி தேவலோகம்
பதுமன் சங்கன் சென்றடைந்து

ஆதீமூலமேயென அபய குரலெலுப்பி
அவதாரம் பல பூண்டு
அவதரித்த பெருமானே அருள்புரியும்
ஆழ்வார் புகழ் பாடியத் திருமாலே

சந்தேகத்தை தீர்த்து விடை தருகயென
சங்கன் பதுமன் நாராயணனிடம் வேண்டிட
சிரித்த பெருமானோ விடையோ எண்ணிடமில்லை
சிறந்தப் பதிலுக்கு வியாழப் பகவானிடம்
சந்தேகத்தை கேளுங்கள் என்று உரைக்க

விரைந்தனர் வியாழ பகவானிடம்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (26-Jul-23, 5:59 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 19

மேலே