சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் -13

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் -13
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாகராசர்கள் அம்பாளிடம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நாகராசர்கள் உமையவளை நாடி சந்தேகத்தை
நாவுரைத்து தீர்க்க கைலாசம் சென்று

உயிர்களின் சிவகதியாகிய ஈசனின் சக்தியே
உலகை ஆளும் புவனேசுவரித் தேவியே
உமையவளை உனை நினைத்தாலே
உன்னதமாக அனைத்தும் ஆகுமே

அண்டத்தில் காஷ்மீர் முதல் குமரிவரை
அவதரித்து சக்தி பீடமாக உறைந்தவளே
பிண்டத்திலும் உச்சி தலை முதல்
பாதம் வரை சூட்சுமமாக உறைந்து

ரிஷிகளின் ஞானக் கண்களுக்கு தெரிந்து
மந்திரத்தை ஜாபிக்க அருள் புரிந்தவளே
சக்தி பீடம் செல்ல இயலாத
சாமான்ய பக்தர்கள் அவர்களின்

உடல் உறுப்பில் உறைந்த மகசக்தியை
உண்மையாக தியானித்தால் பேரருளை தருபவளே
யோக பலத்தால் அளிக்கும் வாக்குகளை
யார் தடுத்தாலும் விதியே தடுத்தாலும்
சக்தியுடன் துணை நின்று அருள்பவளேயென

நாகராசர்கள் அம்பிகையின் புகழைப் பாடி
நலமே அருள் பெற்றுத் தன்னுடையச் சந்தேகத்தை
உமையவளிடம் எடுத்துரைக்க
உமையவள் நாகர்களை சாந்தப்படுத்தி
உலகை ஆளும் ஈசனிடம் செல்கிறார் ...

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (28-Jul-23, 6:03 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 24

மேலே