தழுவிய காதல்

பேச நினைக்கிறன் மௌனம் என்னை தழுவியது
பார்க்க நினைக்கிறன் வெட்கம் என்னை தழுவியது
உன்னை மறக்க நினைக்கிறன் உன் நினைவுகள் என்னை தழுவியது
உன்னுடன் வாழ நினைக்கிறன் காதல் என்னை தழுவியது
தழுவிய காதலால் நானும் சிறைபிடிக்கப்பட்டேன்
உன்னால் நான் என்னை மறக்கவில்லை
உனக்குள் நீ என்னை மறைத்தாய்......
வாழ நினைக்கிறன் உன்னோடு
வாழ வருவாயா என்னோடு....?
உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்
காலமெல்லாம் நம் காதலோடு.......

எழுதியவர் : முனைவர் ஆ.கிருஷ்ணவேணி (30-Jul-23, 6:12 pm)
Tanglish : thaluviya kaadhal
பார்வை : 162

மேலே