கண்டதும் காதல்
சதுராடிய அவளின் நயனங்கள்
நிலைகுத்தியது என்னில்...
கூர்விழி குத்தீட்டியால் குருதி
வழிந்தது என்னில்...
வேல் விழியால் விதைத்தேன்
காதலை அவளுல்....
சிலிர்ப்பை தேக்கி நாணம்மிக
விழியால் பருகினாள்....
காலம் தாழ்ந்த பண்புடன்விழி
அகற்றி அகன்றேன்....
பெண்ணவள் பதற்றம் மிக
கை பிடித்தாள் எந்தன்...
ஸ்பரிசம் உணர்த்தியது தெளிவாக அவளின் மனதை....
அவளின் இதயத்தின் துடிப்பை
உணர்ந்தேன் என்னுள்.....
யென்னிதயம் பேசியது அவள்
என்னவள் என்று....
கவிபாரதீ ✍️