இருவிழிப் பார்வை
இருவிழிப் பார்வை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இருவிழிப் பார்வையில்
ஒருநொடி மின்னலாக/
இடியாக தாக்கியதில்
இடிந்தத இதயத்தை/
ஒட்டிடும் பசையாக
கட்டிட வந்துவிடு /
ஒதுங்கியேப் போனாலும்
பதுங்கியேக் கைப்பிடிப்பேன் /
மரங்களைத் தழுவிடும்
கரமில்லா தென்றல்/
மரக்கிளையை ஆடவைத்து
பாராமல் செல்வதாக/
பார்வையால் காயப்படுத்தி
பாராது போன்று /
பாசங்கு காட்டியே
மோசடி செய்பவளே /
எனக்கென்றுப் பிறந்வளே
என்கண்ணில் பட்டவளே /
எனக்குப் பதிலை
எண்ணியே சொல்லிவிடு /
எவ்வளவு காலமானலும்
அவ்வளவு நாட்கள்/
ஏக்கத்துடன் காத்திருந்து
ஊக்கத்துடன் மாலையிடுவேன் /
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்