மாந்தளிர் மேனியள் மாலைநிலா

சிவந்து விரிந்திடும் செவ்வண்ண ரோஜா
சிவந்து விரிந்திடும் செங்கதிர் காலையில்
மாந்தளிர் மேனியள் மாலைநிலா வந்தாய்நீ
பூந்தமிழ் புன்னகை பூத்து

சிவந்து விரிந்திடும் செவ்வண்ண ரோஜா
சிவந்தபொற் செங்கதிர் காலை -- சிவந்தநீ
மாந்தளிர் மேனியள் மாலைநிலா வந்தாய்நீ
பூந்தமிழ் புன்னகை பூத்து

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-23, 9:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே