உயிர் ஓவியம்

எந்தன் காதல் "ஓவியமே"
சில நாட்களாக உன்னை
சந்திக்க முடியவில்லை
சிந்திக்காமலும்
இருக்க இயலவில்லை

நினைவென்னும்
தூரிகையை கொண்டு
உனை "ஓவியமாக" வரைந்தேன்
வரைந்த "ஓவியத்தை"
உற்றுப் பார்த்தேன்
"ஓவியம்" எனைப் பார்த்து
கண் சிமிட்டி
உயிர் கொண்டதே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Aug-23, 4:44 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : uyir oviyam
பார்வை : 289

மேலே